ஆதார் இணைக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உத்தரவு
வங்கிக் கணக்கு, சிம் கார்டு ஆகியவற்றுடன் ஆதார் இணைக்க கடைசி தேதியை அறிவித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.


வங்கிக் கணக்குகளுடனும், சிம் கார்டு எண்களுடனும் ஆதார் எண்களைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவது சட்டத்துக்குப் புறம்பானது எனவும், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை ஏ.கே. சிக்ரி மற்றும் அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அதில், வங்கி மற்றும் தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக வலியுறுத்தி வந்தாலும் அதற்கான கால அவகாசத்தை குறிக்கத் தவறி விட்டன.
எனவே ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு எண் இணைக்க டிசம்பர் 31-ந் தேதியும், சிம் கார்டு உடன் ஆதார் இணைக்க வருகிற பிப்ரவரி 6-ந் தேதியும் கடைசி தினமாக கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்புடைய நிறுவனங்கள் குறிப்பிட்டு வலியுறுத்த உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...