அமராவதி: தின்பண்ட பாக்கெட்டில் இருந்த சிறு பொம்மையை உணவுப்பொருள் என நினைத்து கடித்து மென்ற நான்கு வயதுச் சிறுவன் உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது எலூரு என்னும் நகரம். இங்கு வசிக்கும் மீசலா நிரீக்ஷன் என்னும் நான்கு வயது சிறுவனுக்குத்தான் இத்தகைய துக்கமான முடிவு நேர்ந்துள்ளது.
இச்சிறுவன் நேற்று தனது வீட்டில் அமர்ந்து கடையில் வாங்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தினை தின்று கொண்டிருந்தான். அப்பொழுது இத்தகைய பாக்கெட்டுகளில் குழநதைகளை ஈர்ப்பதற்காக போடப்படும் மிகச் சிறிய அளவிலான பொம்மை ஒன்றை, சரியாகக் கவனிக்காமல், உருளைக்கிழங்கு சிப்ஸ் என்று நினைத்து எடுத்து கடித்து மென்று விழுங்க ஆரம்பித்துள்ளான்.
இதன் காரணமாக சிறுவன் உடனேயே வாந்தி எடுக்கத் துவங்கியுள்ளான். ஆனால் குறிப்பிட்ட பொம்மை அவனது தொண்டையில் சிக்கிக் கொண்டதால் அவன் மூச்சு திணறலுக்கு உள்ளாகி மயக்கமாகியுள்ளான்.
அவனது சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அவனது தாய், உடனடியாக அவனை அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவன் இறந்தே கொண்டு வரப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அந்த சிறுவனது பெற்றோர் குறிப்பிட்ட தின்பண்ட தயாரிப்பாளருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


