டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிரசார வாகனத்தில் பாய்ந்து ராகுலுடன் செல்ஃபி எடுத்த சிறுமி - விடியோ

குஜராத்தில் பிரசாரம் செய்து வரும் ராகுலின் பிரசார வாகனத்தில் பாய்ந்த சிறுமி...

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:01 pm

Raghavendran

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. டிசம்பர் 9-ந் தேதி, டிசம்பர் 14-ந் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளன.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதனால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பாஜக தரப்பில் குஜராத் முன்னாள் முதல்வரும், இந்தியப் பிரதமருமான நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் குஜராத்தின் பரூச் பகுதியில் புதன்கிழமை மாலை சாலை மார்கமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது, கூட்டத்தில் இருந்த சிறுமி திடீரென ராகுல் பிரசார வாகனத்தை நோக்கிப் பாய்ந்தார். பின்னர் வாகனத்தின் மீது ஏறிய அந்தச் சிறுமி, ராகுலுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். 

இதன்பின்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் அந்தச் சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த விடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.