பாட்னா: பாட்னா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளநிலை மருத்துவர்களின் திடீர் போராட்டத்தின் காரணமாக, ஏழு நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ளது பாட்னா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை. இங்கு கடந்த வாரம் நடைபெற்ற இளநிலை மருத்துவர்களுக்கான கவுன்சிலிங்கில் தகராறு ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். நிலைமையை சமாளிக்க உள்ளே புகுந்த காவல்துறை தடியடி பிரயோகம் செய்து நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த தடியடியில் இளநிலை மருத்துவர்கள் சிலருக்கு காயமுண்டானது. சிலர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய் நள்ளிரவிலிருந்து பயிற்சி மருத்துவர்கள் திடீர் என்று 24 மணி நேர போராட்டத்தில் குதித்தனர். தங்களை தாக்கிய காவல்துறையினர் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரியும், அப்பாவி மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள எப்.ஆர்.களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் இந்த போராட்டத்தினால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.இந்நிலையில் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக பாட்னா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அதிகாரியொருவர் செய்தியாளர்களிடம் பேசியாதாவது:
இளநிலை மருத்துவர்களின் திடீர் போராட்டத்தின் காரணமாக, போதிய சிகிச்சை கிடைக்காமல் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த 7 நோயாளிகள் மரணம் அடைந்திருக்கின்றனர். அதே போல் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் வெளிநோயாளிகள் பிரிவின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள து. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவுகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


