புதுதில்லி: மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியுமா என்பதை தகுந்த மென்பொருள் ஆய்வாளர்கள் கொண்டு விளக்கமளிக்க வேண்டுமென்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா. இவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், மஹாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல்களிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லு முல்லு செய்து முடிவுகள் திருத்தப்பட்டிருப்பதாக பரவலாக புகார்கள் எழுந்தன. எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இத்தகைய செயல்கள் மூலம் முடிவுகளை மாற்றியமைக்க முடியுமா என்பதை நம்பிக்கைக்குரிய மின்னணு சோதனைக் கூடம் அல்லது மென்பொருள் ஆய்வாளர் மூலம் ஆய்வு செய்து முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தொடர் நடவடிகைகள் எடுக்கப்பட வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரத்தின் தொழில்நுட்ப, எந்திர மற்றும் மென்பொருள் வடிவமைப்பு குறித்த தகவல்கள் ரகசியமாக இருக்கும் வரைதான் எந்திரத்தை ஒன்றும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தகவலும் பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் ஏதேனும் அரசியல் கட்சியின் சார்பாக வாக்குப்பதிவு எந்திரத்தை சீர்குலைக்கும் இத்தகைய நடவடிக்கைள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த பொது நல மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் உரிய விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் மத்திய அரசுக்கு எந்த உத்தர வும் பிறப்பிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


