லக்னோ: உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் இனிமேல் பணி நேரத்தில் பான், பான்மசாலா உள்ளிட்ட புகையிaலை பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடக் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு யோகி ஆதித்யநாத் இன்று தலைநகர் லக்னோவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பவன் என்னும் தலைமைச் செயலக கட்டிடத்திற்கு முதன்முறையாக வருகை தந்தார். துணைமுதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவும் அவருடன் வருகை தந்திருந்தார்.
இந்த வருகை குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மவுரியா பேசினார். அபொழுது அவர் கூறியதாவது:
முதல்வர் இன்று இந்த கட்டிடத்தின் எல்லா தளங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அத்துடன் அங்குள்ள அதிகாரிகளிடமும் பேசினார். அப்பொழுது அலுவலகத்தின் சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலை எச்சில் கறைகளை கண்டு அதிருப்தியடைந்த முதல்வர், அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, இனிமேல் அரசு ஊழியர்கள் இனிமேல் பணி நேரத்தில் பான், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடக் கூறியுள்ளார்
அத்துடன் அலுவலக சூழ்நிலையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் பொருட்டு பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
இவ்வாறு மவுரியா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


