மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அயோத்யா விவகாரத்தை அமைதியா பேசி தீர்த்துக்குங்க: சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை  

சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வதே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ...

News image
Updated On :21 மார்ச் 2017, 6:49 am

புதுதில்லி: சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வதே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சித்தலைவரான சுப்பிரமணியன் ஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தில் 2010-ஆம் ஆண்டு அலஹாபாத் உயர்நீதி மன்றம்  அளித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க தனியான அமர்வு ஒன்றை விரைவில் அமைக்குமாறு வலியுறுத்தினார்.

2010-ஆம் ஆண்டு அலஹாபாத் உயர்நீதி மன்றம்  அளித்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி நிலப்பகுதியானது மூல வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர்களிடையே பிரித்துக் கொள்ளபட வேண்டுமென்று தீர்ப்பளித்திருந்தது.

சுவாமியின் மனுவை கேட்ட பிறகு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறியதாவது:

சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வதே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும். நீங்கள் விரும்பும் யாராக இருந்தாலும் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யலாம். நீங்கள் என்னை விரும்பினால் நானே கூட செய்லபடத் தயார். ஆனால் பிறகு இந்த வழக்கை நான் விசாரிக்க இயலாது.வேண்டுமானால் மற்றொரு நீதிபதியான எஸ்.கே.கவுலைக்கூட நீங்கள் கேட்கலாம். சம்பந்தப்பட்ட அனைவருமே தங்கள் ஆதரப்புக்கு யாரவது ஓருவரை பிரதிநிதியாக நியமிக்கலாம். நிறைய பிரச்சினைகள் உள்ளது.  நீங்கள் சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்து பேசி வரும்  மார்ச் 31-ஆம் தேதி எங்களுக்கு தெரிவியுங்கள்.

இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.