பனாஜி: கோவாவின் கனகான் கடற்கரையில் திங்களன்று அயர்லாந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியை கண்டுபிடிக்க கத்தோலிக்க துறவியான புனித அந்தோனியார் உதவியதாக வழக்கின் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவின் கனகான் கடற்கரையில் கடந்த திங்கள் அன்று அயர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான இளம்பெண் ஒருவரின் இறந்த உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டது.இந்தவழக்கை விசாரித்த கோவா மாநில காவல்துறை செவ்வாயன்று பழைய குற்றவாகியான் விகாஸ் பகத் என்பவனை கைது செய்தது.இது குறித்து வழக்கின் விசாரணை அதிகாரியும், கனகான் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளருமான சாமி தவாரேஸ் நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த செய்தியில்தான், இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க கத்தோலிக்க துறவியான பதுவாவின் புனித அந்தோனியார் உதவியதாக தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவு பின்வருமாறு:
கடந்த 13-ஆம் தேதி காலையில் 9 மணி அளவில் கனகான் கடற்கரையில் வெளிநாட்டு இளம்பெண் ஒருவரின் இறந்த உடல் நிர்வாண நிலையிகள் கிடப்பதாக தகவல் வந்தது. உடனே நான் எனது வழிகாட்டியான பதுவாவின் புனித அந்தோனியாரிடம் வேண்டிக் கொண்டேன்.அன்று அவருக்கான தினம் .எனவே அவர் இந்த வழக்கில் தலையிட்டு, வழக்கின் சிக்கலைத் தீர்க்க எனக்குஉதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அதன்படியே விசாரணை துவங்கிய சில மணி நேரங்களிலேயே குற்றவாளியைக் கண்டுபிடிக்க தேவையான மிக முக்கிய தடயம் கிடைத்தது. அதன்மூலம்தான் நாங்கள் குற்றவாளியான விகாஸ் பகத்தை நெருங்கினோம். தொடர் விவசாரணையில் அவன் இந்த கொடூர கொலை வழக்கில் தன்னுடைய பங்கை ஒப்புக் கொண்டான்.
இவ்வாறு அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


