கண்ணூர்: கேரளாவில் இடதுசாரி இயக்க ஆதரவு கல்லூரி ஒன்றின் பத்திரிகையில், தேசிய கீதத்தை அவமதிக்கும் விதத்தில் கேலிச்சித்திரம் வெளியானதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள தளசேரியில் அமைந்துள்ளது பிரென்னன் கல்லூரி. அரசு கல்லூரியாக இருந்தாலும் இந்த கல்லூரி இடதுசாரி இயக்க சிந்தனைகளுக்கு ஆதரவு கொண்டதாக கருதப்படுகிறது. இந்த கல்லூரியின் 125-ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடடும் பொருட்டு, அக்கல்லூரியில் உள்ள 'இந்திய மாணவர் சங்கம்' அமைப்பினைச் சேர்ந்தவர்கள், 'பெல்லட்' எனப்படும் மாணவர் இதழ் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டார்கள்.
இந்த இதழில் இடம் பெற்றுள்ள கேலிச்சித்திரம் ஒன்றுதான் தற்பொழுது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தில், திரையரங்கம் ஒன்றில் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் நெருக்கமாக இருப்பது போன்றும், அவர்களுக்கு பிண்ணனியில் தேசிய கொடியின் படமும் இடம்பெற்றுள்ளது.
இது பற்றிய தகவல் அறிந்தவுடன் வலதுசாரி சிந்தனை கொண்ட மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி), இந்த பத்திரிக்கை உருவாக்கத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் இத்தகைய குற்றசாட்டுகளை கல்லூரி முதல்வர் முரளிதாஸ் மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்பொழுது, 'அந்த பத்திரிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் ஏதும் இல்லை. குறுகிய மனப்பான்மையுடன் பார்க்கும் பொழுது வேண்டுமானால் அப்படி தோணலாம். நாங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை சமாதானப்படுத்தமுயற்சித்துக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
தற்பொழுதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


