/

3 ஆண்டுகால மோடி ஆட்சியில் 37.5 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளது: சுஷ்மா சுவராஜ்

மத்தியில் பாஜக தலைமையிலான 3 ஆண்டுகால ஆட்சியில் 37.5 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:41 pm

DIN

புதுதில்லி: மத்தியில் பாஜக தலைமையிலான 3 ஆண்டுகால ஆட்சியில் 37.5 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் சுஷ்மா கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலையிலான பாஜக அரசின் மூன்றாம் ஆண்டுகால ஆட்சியில் அன்னிய நேரடி முதலீடு 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 80 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளதாகவும், உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் உறவு கணிசமாக முன்னேறியுள்ளது.

முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்துடன் கொண்டிருந்த அமெரிக்க - இந்திய உறவு, தற்போதைய அதிபர் டிரம்ப் நிர்வாகத்துடனும் நீடித்து வருவதாக சுஷ்மா சுவராஜ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.