டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மீரா குமார், கோபாலகிருஷ்ண காந்திக்கு ஆதரவளியுங்கள்: சோனியா கோரிக்கை

குடியரசுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் மீரா குமார் மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோருக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்சோனியா தெரிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:26 pm

ANI

குடியரசுத் தலைவர் தேர்தல் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இதன்காரணமாக எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியதவாது:

எண்ணிக்கை அடிப்படையில் நாம் பின்தங்கி இருக்கலாம். ஆனாலும் போரிடாமல் வீழக்கூடாது. நம்முடைய வேட்பாளர்கள் மீரா குமார் மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகிய இருவரும் தகுதியான வேட்பாளர்கள். ஆகவே அவர்களுக்கு நம் அனைவரின் ஆதரவும் மிக அவசியம்.

குறுகிய மனப்பான்மையும், மதவாத அரசியலையும் ஊக்குவிப்பவர்களுக்கு நாம் எந்த விதத்திலும் இடம் கொடுக்கக் கூடாது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நமது ஒற்றுமை இந்தத் தேர்தலில் வெளிப்பட வேண்டும்.

இந்தத் தேர்தலானது எதிர்காலத்துக்கான சுதந்திரப் போர். நமது செயல்களில், எண்ணங்களில் தெளிவும், தைரியமும், நம்பிக்கையும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.