தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒரே குடும்பத்தைச்

News image
Updated On :8 ஜூலை 2017, 4:31 am

பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் ஒருமுறை அத்துமீறி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டிய குல்புர் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை சுமார் 6.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த தாக்குதலில், பொதுமக்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் தந்தையும் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 2 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

சர்வதேச விதிமுறைகளை மீறி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இந்திய வீரர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

முன்னதாக, பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு வாகனங்களை குறிவைத்து நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மற்றும் சக்கா தா பாக், கர்ரி கர்மாரா பகுதி கிராமாங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.