செஹோர் (மத்திய பிரதேசம்): ஏழை குடும்பத்திலிருந்து திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கான அரசின் நிதியுதவி கிடைக்காததால், பூங்கா ஒன்றில் அம்பத்கர் சிலை முன்பு ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் கல்லு ஜாதவ் மற்றும் வைஜயந்தி ரஜோரி. தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த, மிகுந்த ஏழ்மை நிலைமையில் உள்ள இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்று இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்தார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் நடைமுறையில் உள்ள , "பொருளாதார நிலையில் நலிவடைந்த பெண்களுக்கான திருமண நிதியுதவி' திட்டத்தின் கீழ் நிதி பெற வைஜயந்தி குடும்பத்தினர் விண்ணப்பித்தும் நிதி கிடைக்கவில்லை
எனவே என்ன செய்வது என்று தடுமாறிய இருவரும் சேர்ந்து ஒரு முடிவு எதுய்த்தனர். அதன்படி கடந்த 3-ஆம் தேதியன்று, செஹோர் நகரத்தில் உள்ள பூங்காவிற்கு வந்தனர்.அங்கே வைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு முன்பாக நின்றவர்கள், தங்கள் திருமணத்தில் வழக்கமாக செய்ய வேண்டிய சடங்கான 'ஏழு முறை சுற்றுதல்' சடங்கினை அம்பேத்கர் சிலையினை சுற்றி வந்துநிறைவேற்றினர்.
அத்துடன் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த புத்தரின் படத்திற்கு அருகே அவர்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்.
இதன் மூலம் வழக்கமான திருமண சடங்குகளில் உண்டாகும் அதிகப்படியான செலவுக்கு எதிராக, தாங்கள் ஒரு செய்தியை பரப்ப விரும்புவதாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது: மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


