நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பிரதமரின் 'மனதின் குரல்' உரைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி! 

ஒவ்வொரு மாதமும் வானொலி வழியாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் 'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியை நாளை ஒளிபரப்ப இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:51 am

PTI

புதுதில்லி: ஒவ்வொரு மாதமும் வானொலி வழியாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் 'மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சியை நாளை ஒளிபரப்ப இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் நாட்டு மக்களுக்கு வானொலி வழியாக பிரதமர் மோடி உரை நிகழ்த்தும் 'மனதின் குரல்' (மான் கி பாத்) நடைபெறுவது வழக்கம். தற்போது பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி துவங்கி, மார்ச்8-ஆம் தேதி வரை நடைபெறுவதாலும் , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அவரது உரைக்கு அனுமதி கிடைக்குமா என்ற சூழல் நிலவியது.

இந்நிலையில் அவரது உரைக்கு அனுமதி கேட்டு மத்திய அரசானது இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகிய பொழுது, அனுமதி அளித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறை பிரதமர் மோடியின் உரையானது பள்ளியிறுதி தேர்வை எதிர் கொள்ள இருக்கின்ற மாணவர்கள் குறித்து அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.