/

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: அமிர்த்சர் கிழக்கு தொகுதியிலிருந்து சித்து மனுதாக்கல்! 

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து அமிர்த்சர் கிழக்கு தொகுதியில் இன்று மனு தாக்கல் செய்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:47 am

IANS

அமிர்த்சர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து அமிர்த்சர் கிழக்கு தொகுதியில் இன்று மனு தாக்கல் செய்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலங்களவை எம்.பியாக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரசில் இணைந்தது என்பது தனது தாய் வீட்டுக்கு திரும்பியது போன்று இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமிர்த்சர் கிழக்கு தொகுதியில் போட்டியிட அவர் இன்று மனு தாக்கல் செய்தார்.  

மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த முறை வெற்றி என்பது பஞ்சாபுக்கு உரியதாக இருக்கட்டும்.இங்குள்ள ஓவ்வொரு வாக்காளரும், பஞ்சாபின் நலனுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.  தற்போது உள்ள அமைப்பில் உள்ளே நுழைந்து சரி செய்ய வேண்டியது என் கடமையாக கருதுகிறேன்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.