அதிக அளவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ, மாணவர்களை உருவாக்குவதில் பிற இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் பாராளுமன்ற மேலவைக் கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளது. அகில இந்திய உயர்கல்வி ஆய்வகம் வெளியிட்ட சர்வே ஒன்றில் கடந்த மூன்றாண்டுகளில் (2013-14 முதல் 2015-16 வரை)இந்தியாவெங்கிலும் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மற்றும் கல்வி நிறுவனங்களின் மூலமாக முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை முறையே 69,862. 2015- 16 வரையிலான கல்வி ஆண்டில் தேர்ச்சியுற்று முனைவர் பட்டம் பெற்ற 24,171 இந்திய மாணவர்களில் சுமார் 3,973 பேர் தமிழக பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களே. தமிழ்நாட்டைத் தொடர்ந்து அடுத்ததாக உத்தரபிரதேசம் 2,205 முனைவர் பட்ட மாணவர்களையும், கர்நாடகா 1,945 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கித் தந்துள்ளனவாம்.
இதனடிப்படையில் முனைவர் பட்ட தேர்ச்சி விகிதத்தில் பிற இந்திய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளியது தமிழகம் என்பது உறுதியாகிறது. மொத்த தேர்ச்சி சதவிகிதத்தில் தமிழகம் ஈட்டியது 16.44%. பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான என்.பசுபதி தமிழக மாணவர்களின் இந்த வெற்றி குறித்துப் பேசுகையில் அரசுக் கல்லூரி விரிவுரையாளர் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு NET/ SLET தேர்வுகளைப் போலவே முனைவர் பட்டச் சான்றிதழும் தகுதி காண் மதிப்பெண்ணாகக் கருதப்படுகிறது. மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தால் அதற்கென தனி மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் காரணமாகவே தமிழ்நாட்டில் மாணவர்கள் முனைவர் பட்டம் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். என்று கூறினார்.
எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் அதிக்கபடியான முனைவர் பட்டதாரிகளால் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் ஆய்வுப் பணிகளில் எந்த விதமான கவனக் குறைவுகளோ, ஆராய்சிகளில் தரகுறைவுகளோ ஏற்பட்டு விடவில்லை. அவை நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனால் முனைவர் பட்டத்துக்கான பி.ஹெச்.டி பெறுகையில் அது எவ்விதமாகப் பெறப்படுகிறது என்பதைப் பொறுத்து அதற்கான தர வரிசை நிர்ணயிக்கப்படும். அதாவது கேட்டகிரி B Phdகளும், எக்ஸ்டர்னல் Phd களும் ரெகுலர் Phd க்கு இணையாக கருதப்பட மாட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா? பாஜக கோரிக்கையும் காங்கிரஸ் கிண்டலும்!
கதாநாயகனாகும் சாய் அபயங்கர்?

சிஎஸ்கேவின் வரலாற்று வெற்றியை முகேஷ் சௌதரிக்குச் சமர்ப்பித்த கேப்டன் ருதுராஜ்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


