உத்தரபிரதேச சட்டசபை முதல்கட்ட தேர்தல்: 53% வாக்குப்பதிவு!
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்கட்டமாக 73 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 53% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்கட்டமாக 73 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 53% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 73 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 839 வேட்பாளர்கள் களத்தில் இருந்த தேர்தலில் 26,822 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பொதுவாக பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவுமின்றி இந்த தேர்தல் அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகள் காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.
புதுதில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தபடி மதியம் மூன்று மணி அளவில் 53 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற்றிருந்தது. அதே நேரம் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடி அதிகாரி ஒருவர் 52 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற்றிருந்தது என்று தெரிவித்தார்.
அதிக பட்சமாக அலிகாரில் 55.85 சதவீதமும், குறைந்த பட்சமாக பிரோசாபாத்தில் 40.80 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...