தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பொய்யின் மொத்த உருவம் பாஜக: காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சனம்

பொய்யின் மொத்த உருவமாக பாஜக விளங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல், வெள்ளிக்கிழமை விமர்சித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:25 pm

Raghavendran

காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்ற பின்னர் அவரது தலைமையில் முதல் காங்கிரஸ் உறுப்பினர் கூட்டம் தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல், பேசியதாவது:

குஜராத் வளர்ச்சி என்பது வெறும் மோடி வித்தை. இதை நான் குஜராத் சென்றபோது தெரிந்துகொண்டேன். அவர்கள் கூறுவது போன்று இத்தனை ஆண்டு பாஜக ஆட்சியில் அங்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

குஜராத் வளர்ச்சி என்பதெல்லாம் சுத்தப் பொய். இதை நீங்களும் நேரில் சென்றால் தெரிந்துகொள்ளலாம். வளர்ச்சி என்ற பெயரில் தங்களின் உழைப்பு திருடப்பட்டுள்ளதாக குஜராத் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.

தனிநபரின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் இருப்புத்தொகை அளிப்பது, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற அனைத்தும் பொய்.

2ஜி விவகாரத்தின் உண்மைத் தன்மை எங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். அது தற்போது தீர்ப்பாக வெளியாகி மக்களுக்கு தெரியவந்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.