புதுதில்லி: அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதித் தேதி, மார்ச் 31, 2018 வரை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயப்படுதியுள்ளதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் மொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் கவனத்திற்கு மூத்த வழக்கறிஞர் சுரேஷ், ஆதார் அட்டையின் சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்பான வழக்கு ஒன்றினை கொண்டு வந்தார்.
கர்நாடக மாநில ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி புட்டுசுவாமி என்பவர் சார்பாக இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் ஆதார் அட்டை தொடர்பான சட்டம் என்பது அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதே போன்ற வழக்கினை பலரும் தொடர்ந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அப்பொழுது மூன்று நீதிபதிகள் அமர்வானது ஏற்கனவே ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் அரசியல் சட்ட அமர்வானது, ஆதார் சட்டத்தின் அரசியல் சட்டபூர்வ அங்கீகாரம் குறித்த வழக்குகளை விசாரிக்கும் தேதியினை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். பின்னர் அந்த வழக்கானது அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
அப்பொழுது நீதின்றத்தில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இறுதித் தேதியினை மார்ச் 31, 2018 வரை நீட்டிக்க மத்திய அரசு விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஆனால் உச்ச நீதின்றத்தின் முந்தைய தீர்ப்பு ஒன்றின் காரணமாக வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன் ஆதாரை இணைப்பதற்கான இறுதித் தேதியை நீட்டிப்பதில் மட்டும் சிரமம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

15 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததால் நடுவச்சேரி ஊராட்சி மன்றம் முற்றுகை!
புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!
மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


