தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பல்வேறு அரசுத் திட்டங்களுக்கு ஆதாரை இணைப்பதற்கு கடைசித் தேதி எது தெரியுமா?

அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி  டிசம்பர்-31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:46 pm

IANS

புதுதில்லி: அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி  டிசம்பர்-31 வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அரசியல் சாசன அடிப்படையில் ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் தன்மை குறித்தான பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் ஆதார் வழக்கின் பல மனுதாரர்கள் சார்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்தவா ராய் மற்றும் கன்வில்கர் அடங்கிய அமர்வின் முன்பு மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர் அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி இம்மாத இறுதியில் முடிய உள்ளதாக சுட்டிக் காட்டினார்.

எனவே இந்த வழக்குகளை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் அவர் அமர்வின் முன்பு வேண்டுகோள் வைத்தார் 

அப்பொழுது மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசித் தேதி  டிசம்பர்-31 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதார் தொடர்பான வழக்குகளை தற்பொழுது விசாரிக்க அவசரம் இல்லை என்பதால் நவம்பர் முதல் வாரம் விசாரிப்பதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது. தேதி நீட்டிக்கப்படுமாயின் வழக்குகளை பின்னர் விசாரிப்பதில் தங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று வழக்கறிஞர் ஷ்யாம் திவானும் சம்மதம் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.