டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:36 pm

ANI

புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தெய்பா தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம் சம்போராவில் நேற்றிரவு அவந்திபொரா போலீஸ், ஆர்ஆர் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் கூட்டாக நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு ராணுவ வீரர்கள் அவர்களை விரட்டி துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது, இரண்டும் தீவிரவாதிகள் ராணுவத்தின் படியில் சிக்கினர். அதில் ஒருவனை வீரர்கள் சுட்டுக் கொன்ற நிலையில், மற்றொருவன் இருட்டைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளான். தப்பிச் சென்ற தீவிரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகின்றன.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின், அபு இஸ்மாயில் குழுவை சேர்ந்த உமர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, புல்வாமா மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.