மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் துறவி பிரக்யா சிங் தாகூருக்கு ஜாமீன்!

மகாராஷ்டிராவின் நாசிக் அருகேயுள்ள மாலேகானில் 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள, பெண் துறவியான பிரக்யா சிங் ...

News image
Updated On :25 ஏப்ரல் 2017, 7:22 am

மும்பை: மகாராஷ்டிராவின் நாசிக் அருகேயுள்ள மாலேகானில் 2008-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி சிறையில் உள்ள, பெண் துறவியான பிரக்யா சிங் தாகூருக்கு ஜாமீன் வழங்கி பாம்பே உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகேயுள்ள சிறு கிராமம் மாலேகான். விசைத்தறிகள் நிறைந்து காணப்படும் இந்த ஊரில் இஸலாமியர்கள் எண்ணிக்கை அதிகம். இங்கே கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் மரணமடைந்தார்.

இந்தவழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த தேசிய புலனாய்வு ஆணையமானது, பெண் துறவியான பிரக்யா சிங் தாகூர் , முன்னாள் ராணுவ தளபதி பிரசாத் புரோகித் ஆகியோர் மீது குற்றம் சாட்டியது. அவர்கள் இருவரும் விசாரணைக்கு பிறகு 2009-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜாமீன் கோரி இவர்கள் இருவரும் பாம்பே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் பெண் துறவியான பிரக்யா சிங் தாகூருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. இதற்காக அவர் ரூ.50000 மதிப்புள்ள பிணை உறுதிப் பத்திரம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள 9 ஆண்டுகளில் அவர் பிணையில் வெளிவருவது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் மற்றொரு குற்றவாளியான முன்னாள் ராணுவ தளபதி பிரசாத் புரோகித் தாக்கல் செய்த மேல்முறையீட்டு ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.