ஹைதராபாத்: முப்பது ரூபாய் டிப்ஸை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் நண்பனைக் கொன்ற ஹோட்டல் ஊழியர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ராஜு மற்றும் கமலேஷ். இவர்கள் இருவரும் ஹைதராபாத்தின் ஹாபிஸ் பாபா நகரில் உள்ள ஸ்பைஸி பவார்ச்சி எனும் உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அங்குள்ள நடைபாதை ஒன்றில்தான் அவர்கள் இருவரும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காமேஷுக்கு 30 ரூபாய் டிப்ஸ் கிடைத்துள்ளது. அதில் ராஜுவும் பங்கு கேட்டுள்ளார். ஆனால் காமேஷ் அனைத்து பணத்தையும் தானே வைத்துக் கொள்ள விரும்பியுள்ளார். இதன் காரணமாக இருவருக்குள்ளும் தகராறு மூண்டுள்ளது.
இதில் கமலேஷ் நண்பன் ராஜுவை கீழே தள்ளியுள்ளார். இதில் ராஜுவுக்கு தலையில் பலத்த காயம் பட்டுள்ளது. அதிக ரத்த போக்கினால் அவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார். போலீசார் கமகேஷை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


