ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்கத் தடை

நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்கள் யாரும் செல்போனில் புகைப்படமோ அல்லது விடியோவோ எடுத்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2016, 6:05 am


புது தில்லி: நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் பார்வையாளர்கள் யாரும் செல்போனில் புகைப்படமோ அல்லது விடியோவோ எடுத்துக் கொள்ள மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மன், தனது செல்போனில் விடியோ எடுத்து அதனை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இனி நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் யாரும் புகைப்படம் அல்லது விடியோ எடுத்துக் கொள்ள முடியாது.

நாடாளுமன்ற வளாகம் நாட்டின் மிக முக்கிய இடமாகும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் கருதியே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தின் இணைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றத்துக்குள் வரும் ஊழியர்களும், பார்வையாளர்களும் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படும். ஆனால், அதில் புகைப்படம் அல்லது விடியோ எடுக்க தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.