ஹைதராபாத்தில் கன மழை எதிரொலி: தயார் நிலையில் ராணுவம்
தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான கட்டுப்பாட்டு அறைகளை தயார் நிலையில் இருக்குமாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநிலம் முழுவதும் 60 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர்.
தேவை ஏற்படின் ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக, தாழ்வான பகுதிகள் பிற பகுதிகளோடு தொடர்பற்ற நிலையில் இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...