நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி: காஷ்மீர் எல்லையில் கடும் பீரங்கி சண்டை

இந்திய எல்லைப் பகுதி மீது இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் கடும் பீரங்கி சண்டை நடந்து வருகிறது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


ஜம்மு: இந்திய எல்லைப் பகுதி மீது இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் கடும் பீரங்கி சண்டை நடந்து வருகிறது.

ரஜௌரி மாவட்டம் நௌஷேரா பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் நௌஷேராவின் 3 பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஷெல்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டது.

மோர்ட்டர் வெடிகுண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளைக் கொண்டும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பீரங்கிகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய எல்லையை ஒட்டியுள்ள கல்சியான், ஜங்கர், மக்ரி பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.