ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து: ஆதாரமற்ற செய்தி என்கிறார் மத்திய அமைச்சர்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக வெளியான செய்தி ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

News image
Updated On :20 மே 2016, 4:11 pm

புது தில்லி: மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக வெளியான செய்தி ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறினார்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு (NEET) நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி முதல்கட்ட தேர்வு முடிவுற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்வுகள் ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்கவிருப்பதாக இன்று செய்திகள் வெளியாயின.

இச்செய்தி அடிப்படை ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, யுஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டப்படி ஜூலை 24 ஆம் தேதி இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு நடைபெறும். நுழைவுத் தேர்வு தொடர்பாக சில மாநிலங்களில் பிரச்னை உள்ளது. அவை அனைத்தும் விரைவில் சீர் செய்யப்படும் என்றார் நட்டா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.