சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பால் தாக்கரேவைக் கொல்ல திட்டமிடப்பட்டது: டேவிட் ஹேட்லி வாக்குமூலம்

பாகிஸ்தான் - அமெரிக்க பயங்கரவாதியாக இருந்து அப்ரூவராக மாறிய குற்றவாளி டேவிட் ஹேட்லி அளித்த வாக்குமூலத்தில், சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரேவைக் கொல்ல திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:51 pm

IANS

பாகிஸ்தான் - அமெரிக்க பயங்கரவாதியாக இருந்து அப்ரூவராக மாறிய குற்றவாளி டேவிட் ஹேட்லி அளித்த வாக்குமூலத்தில், சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரேவைக் கொல்ல திட்டமிடப்பட்டதாகக் கூறியுள்ளார்.

டேவிட் ஹேட்லியிடம், அமெரிக்காவில் இருந்து காணொலி காட்சி மூலமாக குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய குறுக்கு விசாரணையின் போது, டேவிட் ஹேட்லி கூறியதாவது, சிவ சேனாத் தலைவர் பால் தாக்கரேவைக் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டதாக நான் அறிந்தேன். அவரைக் கொல்ல முயற்சி செய்து கைது செய்யப்பட்ட நபர், போலிஸ் காவலில் இருந்து தப்பித்துவிட்டார் என்று தெரிவித்தார்.

வழக்குரைஞர் அப்துல் வாஹப் கானின் கேள்விகளுக்கு இரண்டாவது நாளாக பதிலளித்த டேவிட் ஹேட்லி இதனைக் கூறினார்.

சிவ சேனா அலுவலகத்துக்கு எத்தனை முறை சென்றீர்கள், அதன் நோக்கம் என்ன என்று வழக்குரைஞர் கான் கேட்டதற்கு, சிவ சேனா அலுவலகத்துக்கு இரண்டு முறை சென்றுள்ளேன், எல்இடி அமைப்பினர் தாக்கரேவை கொல்ல சதி திட்டம் தீட்டுவதற்காக இந்த பயணம் அமைந்தது என்று ஹேட்லி கூறியுள்ளார்.

யாருடைய உத்தரவின் பேரில் சென்றீர்கள் என்ற கேள்விக்கு, பாகிஸ்தானில் இருந்து, எல்இடி மேற்பார்வையாளர் சஜித் மிர்ரிடம் இருந்து உத்தரவு வந்தது என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.