2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தேர்தல் கால சிறப்பு ரயில்கள்: மத்திய அரசு பரிசீலனை

தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் கூறினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:47 pm

PTI

தேர்தல் காலங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் கூறினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் ஒருவர் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளித்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்கா, விழாக் காலங்களில் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, தேவைப்பட்டால் தேர்தல் காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றார்.

மத்திய பிரதேசம், பிகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பல வெளி மாநிலங்களில் வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்து செல்கின்றனர். எனினும், மக்களவை அல்லது சட்டப் பேரவைத் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக அவர்கள் சொந்த ஊருக்கே வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக தேர்தல் காலங்களில் தேவைப்பட்டால் சிறப்பு ரயில் இயக்குவதற்கு அரசு பரிசீலனை செய்யும்  என்றார் அமைச்சர்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அந்தோதியா ரயில்களில் சாதாரணக் கட்டணமே வசூலிக்கப்படும். ஆனால், தேஜஸ் மற்றும் ஹம்சஃபர் ரயில்களில் 'தேவைக்கேற்ப கட்டணம்' (தேவை அதிகமாக இருந்தால் கட்டணமும் அதிகமாக இருக்கும்) வசூலிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.