பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிஸ்னஸ்ல நஷ்டம் எல்லாம் சாதாரணம்பா! மல்லையாவுக்கு தேவே கௌடா ஆதரவு

வியாபாரம் என்றால் நஷ்டம் வரதான் செய்யும் என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் பிரமதர் தேவே கௌடா.

News image
Updated On :12 மார்ச் 2016, 2:01 pm

வியாபாரம் என்றால் நஷ்டம் வரதான் செய்யும் என தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் முன்னாள் பிரமதர் தேவே கௌடா.

வங்கிகளிடம் ரூ. 9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிய மல்லையா வெளிநாடு சென்றுவிட்ட நிலையில் நாட்டில் பெரும்பாலானோர் அவருக்கு எதிரான விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கௌட அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

''விஜய் மல்லையா கர்நாடக மண்ணின் மைந்தன். மேலும், அவர் புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்தவர். வியாபாரத்தில் சில நேரங்களில் தவறுகள் நிகழலாம்'' என செய்தியாளர்களிடம் பேசிய கௌட கூறினார்.

மேலும், சர்வதேச அளவில் வியாபாரம் செய்யும் ஒருவரை குறிவைப்பது சரியல்ல என்றார்

மல்லையா தவிர 60 பெரிய மனிதர்கள் வாங்கிய கடனை திருப்பி தரவில்லை. ஆனால், மல்லையா மட்டுமே ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதாலே ஊடகங்கள் அவரை விமர்சிக்கின்றன. இல்லையென்றால் யாரும் அவரை கண்டு கொள்ள மாட்டார்கள் என்றார் முன்னாள் பிரதமர்.

மல்லையா வெளிநாடு சென்றது குறித்து கருத்து தெரிவித்த கௌட, அவர் மண்ணின் மைந்தன். அவர் நாட்டைவிட்டு ஓடி ஒளியவில்லை. அவரது டுவிட்டர் பதிவின்படி கட்டாயம் திரும்பி வருவார் என்றார்.

தேவே கௌடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உதவியாலே மல்லையா கடந்த 2001 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் கர்நாடக மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.