2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிகார்: பொது இடத்தில் மது அருந்திய 5000 பேர் கைது

பிகார் மாநிலத்தில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்துக்காக இதுவரை 5000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:45 pm

PTI

பிகார் மாநிலத்தில் பொது இடத்தில் மது அருந்திய குற்றத்துக்காக இதுவரை 5000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அனைத்து வகையான உள்நாட்டு மதுபானங்கள் விற்பனைக்கு முதல்வர் நிதிஷ்குமார் தடை விதித்துள்ளார். மேலும் பொது இடங்களில் மது அருந்துவோர் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி பிகாமர் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 1,839 பேரும், மார்ச் மாதத்தில் இதுவரை 869 பேரும் பொது இடத்தில் மது அருந்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகார் மாநிலத்தில் பொது இடங்களில் மது அருந்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதை 10 ஆண்டுகளாக உயர்த்துவதற்கு பிகார் அரசு தீர்மானித்துள்ளது என மாநில கலால் துறை அமைச்சர் அப்துல் ஜலில் மஸ்தான் கூறினார்.

இதனிடையே, பிகாரில் கள்ளச் சாராயம் விற்பவர்கள் மற்றும் காய்ச்சுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். நடைபெற்று வரும் பட்ஜெட் தொடரின்போது இதற்கான மசோதா நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.