குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வெளியான நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினர்.
இந்த கூட்டத்தில் மத்திய உள் துறை செயலர் ராஜீவ் மெகரிஷி, புலனாய்வு துறை இயக்குநர் தினேஷ்வர் ஷர்மா உள்ளிட்ய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குஜராத் மாநிலத்தில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், முக்கியமான இடங்களில் தேசிய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறித்தும் அதிகாரிகள் அமைச்சரிடம் விளக்கி கூறினர்.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள முக்கியமான மதவழிபாட்டு தலங்கள், தொழிற் நிறுவனங்கள், மெட்ரோ நிலையங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
எனினும் தற்போது வரை பயங்கரவாதிகள் குறித்த எவ்வித தகவலும் இல்லை. அவர்களது இலக்கு எது என்றும் தெரியவில்லை.
குஜராத் மாநிலத்துக்குள் 10 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்ததைத் தொடர்ந்து, நேற்று மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதேபோல, உத்ர பிரதேசம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கோவா, மத்ய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சண்டீகர் மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு துறையினர் எவ்வித எச்சரிக்கையையும் இலகுவாக எடுத்துக் கொள்வதில்லை.
பயங்கரவாதிகள் எத்தகைய தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ளும் வகையில், பாதுகாப்பு துறையினர் தயாராகவே உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைப்பு - மூன்றடுக்கு பாதுகாப்பு

காரைக்குடியில் வாக்குகள் எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சிறுகம்பையூா் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


