ஆந்திர மாநில சமூக நலத் துறை அமைச்சர் ரவேலா கிஷோர் பாபுவின் மகன் ரவேலா சுஷில் மீது பெண் ஒருவர் பாலியல் வன்முறை புகார் கொடுத்துள்ள நிலையில், எஃப்ஐஆரில் அவரது பெயரை சேர்க்காமல் நிராகரித்துள்ளது காவல்துறை.
பஞ்ஜாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த பெண், தான், கடந்த வியாழக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கே வந்த காரில் இரண்டு பேர் இருந்தனர். அவர்கள் குடிபோதையில் இருந்தனர்.
அவர்கள் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் தன்னை காருக்குள் வருமாறு மிரட்டியதாகவும், கையைப் பிடித்து இழுத்ததாகவும், அப்போது உதவி கேட்டு தான் குரல் எழுப்பியதால், அக்கம் பக்கத்தில் இருந்து வந்தவர்கள் தன்னை மீட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
ஊர் மக்கள், காரில் இருந்த நபர்களை பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, காரில் இருந்த ஒரு நபர், அமைச்சரின் மகன் என்று குற்றம்சாட்டியவர்களுக்குத் தெரியாது.
ஆனால், காவல்துறையினர் கார் ஓட்டுநர் அப்பா ராவ் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு, சுஷிலை விட்டுவிட்டனர்.
இது குறித்து தொலைக்காட்சிகளில் நேற்று செய்திகள் வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், அமைச்சரின் மகன் பெயர் இடம்பெறாதது குறித்து தகவல்கள் வெளியானது.
உடனடியாக அமைச்சரின் மகன் பெயரை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று, பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

