மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கடத்தப்பட்ட இந்திய சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசத்தில் இருந்து மீட்பு

கிழக்கு தில்லியில் கடத்தப்பட்ட இந்திய சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு இன்று தனது பெற்றோருடன் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2016, 10:35 am

புது தில்லி: கிழக்கு தில்லியில் கடத்தப்பட்ட இந்திய சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்பு இன்று தனது பெற்றோருடன் இணைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2010-ல் சோனு என்ற சிறுவன் இரண்டு பெண்களால் கடத்தப்பட்டான். கடத்தப்பட்ட சிறுவன் தில்லியில் இருந்து பங்களாதேஷ் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் விசாரிக்கையில் சிறுவன் கடத்தப்பட்டது தெரிய வந்தது. பின்பு, பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஜமால் இன் மூசா என்பவர் பெரும் சிரமப்பட்டு பல்வேறு முயற்சிகளை எடுத்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் சிறுவனைத் தனது பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளார்.

பர்குனா மாவட்டம் நீதிமன்றம் மூலம் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் சிறுவனை ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்பின்பு கூடுதல் மாவட்ட நீதிபதி அபு தாஹர் மனிதாபிமான அடிப்படையில் ஒரு லட்சம் டாகா (வங்காள நாணயம்) வழங்கி இந்திய தூதரக அதிகாரிகளிடம் சோனுவை ஒப்படைத்தனர். அதன்பின்பு இன்று தில்லியை அடைந்தான் சிறுவன் சோனு.

இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது....

சிறுவனை பத்திரமாக காப்பாற்றி பெற்றோரிடம் ஒப்படைக்க முயற்சி செய்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார். மேலும், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சோனு தன் பெற்றோருடன் அனுப்பப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.