அலகாபாத் (உத்ர பிரதேசம்): பாரதீய ஜனதா கட்சி தற்போது பெற்றுள்ள அதிகாரத்தை சமூக வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் உத்ர பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் நேற்று தொடங்கியது. நிறைவு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொண்டர்களின் பல ஆண்டுகளின் கடுமையான உழைப்பால் நாம் இப்போது பலனடைந்து வருகிறோம். மத்தியிலும் பல மாநிலங்களிலும் தற்போது ஆட்சியில் இருக்கிறோம். இந்த அதிகாரத்தால் நாம் பாதிக்கப்படக்கூடாது. இந்த அதிகாரத்தை சமூகத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை குறித்து சிந்திக்க வேண்டும்.
தேசத்தை வலுப்படுத்துவதற்கான தேவை உள்ளது. மக்கள், முழக்கங்களால் திருப்தியாவதில்லை. தேசத்தை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து அவர்கள் அக்கறை கொண்டுள்ளனர்.
பாரதீய ஜனதா தொண்டர்கள் சேவை மனப்பான்மை, நடுநிலை, கட்டுப்பாடு, ஒருங்கிணைத்தல், நேர்மறை சிந்தனை, பிறர் குறித்த கரிசணை மற்றும் பேச்சுவாத்தை ஆகிய 7 மந்திரங்களை பின்பற்ற வேண்டும் என்றார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். பிரதமருடன் ஈரானிய பிரதிநிதிகள் சந்திப்பு!

அதிரடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! இணையத்தில் வைரல்!
கரை இல்லாக் கல்வி...
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


