மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் பழைய இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்து விபத்துக்குளானது. இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் உள்ளது கைப்நகர் பகுதி. விசைத்தறி தொழிற்கூடங்களுக்கு மிகவும் புகழ்பெற்ற பகுதி யாகும். இங்கு அமைந்துள்ள பழமையான இரண்டு மாடிகட்டிடம் ஒன்று இன்று காலை 8.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
சம்பவம் குறித்து தகவல் கேள்விப்பட்ட உடன் பேரிடர் மேலாண்மை அணியினர், மாவட்ட தீயணைப்புத்துறை துறையினர் மற்றும் உள்ளாட்சித் துறையைச் சார்ந்த அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் மஹாராஷ்டிரா மாநில கடற்கரை பகுதிகள் முழுவதும் சனிக்கிழமை மாலை முதல் தொடர்ந்த பெய்து வரும் மழையின் காரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னரே நகராட்சி நிர்வாகம் சார்பில், அந்த கட்டிடத்தை அபாயமான கட்டிடம் என்றுஅறிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தது என்றும், அதையும் மீறி அங்கே மக்கள் தனகியிருந்தனர் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர் .
இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது
இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 22 பேர் அந்த கட்டிடத்தில் இருந்து மீட்கப் பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


