கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

காஷ்மீரின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு

குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளின் பேரணியையொட்டி காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On :27 ஜூலை 2016, 8:58 am

ஸ்ரீநகர்: குல்காம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளின் பேரணியையொட்டி காஷ்மீரின் ஒரு சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 8ம் தேதி முதல் காஷ்மீரில் வன்முறை வெடித்ததை அடுத்து அமைதியை ஏற்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அனந்த்நாக் மாவட்டத்தை தவிர மற்ற பகுதிகளில்  நேற்று திரும்பப் பெறப்பட்டது. அனந்த்நாக் பகுதியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் முதியவர் ஒருவர் பலியானார். 14 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக, ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி கடந்த ஜூலை 8ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று குல்காம் மாவட்டம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அனந்தநாக் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.