ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

வளர்ச்சிக் குன்றிய 24 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சி குன்றி இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2016, 9:39 am

புது தில்லி: கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சி குன்றி இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குறைபாடு பற்றி மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டிருந்தால் சிசுவைக் கலைக்கலாம்  என்று 24 வார கால கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அவருடன் பழகிவந்த நபர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கருவுற்ற அப்பெண், 24 வாரங்களுக்குப் பிறகு அந்தக் கருவைக் கலைக்க முயன்றபோது கருக்கலைப்பு தொடர்பான சட்டம் தடையாக இருந்தது.

20 வாரத்துக்கு மேலான கருவைக் கலைக்கக் கூடாது என்று 1971-ஆம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டப் பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்குப் பிறக்கும் குழந்தை மூளை, உடல் குறைபாடுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், கருக்கலைப்பு மட்டும் செய்ய மறுத்துவிட்டனர்' என்று தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது. இந்நிலையில், அப்பெண்ணின் வயிற்றில் உள்ள கருவின் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மருத்துவ ஆய்வு நடத்த மும்பை கிங் எட்வர்ட் நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து மருத்துவ அறிக்கை கடந்த சனிக்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கருவின் வளர்ச்சி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பெண்ணின் உயிருக்கு ஆபத்து நேராமல், கருவைக் கலைக்கலாம் என்றும் மும்பை மருத்துவமனை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. தெரிவிக்கப்பட்டிருந்ததை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கருவில் உள்ள சிசு குறைபாட்டுடன் இருந்தால் கருக்கலைப்பு செய்யலாம் என்று தீர்ப்பளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.