ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

71 சிறார்கள் மீட்பு: விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

ஹவுரா - வாஸ்கோடகாமா அமராவதி விரைவு ரயிலில் வந்த 71 சிறார்களை விசாகபட்டினம் மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் மீட்டுள்ளனர்.

Updated On :20 ஜூலை 2016, 5:54 am

விசாகப்பட்டினம்: ஹவுரா - வாஸ்கோடகாமா அமராவதி விரைவு ரயிலில் வந்த 71 சிறார்களை விசாகபட்டினம் மாவட்ட குழந்தைகள் நலன் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் மீட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடத்தப்பட இருந்தவர்களா என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இயங்கும் மதரஸா மாணவர்கள் என்பதும், கோடை விடுமுறை முடிந்து ஹவுராவில் இருந்து திரும்பிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.

சிறார்களை அழைத்து வந்த நான்கு பேரிடமும், எந்த அடையாள அட்டையும் இல்லாதது காவல்துறையினருக்கு சந்தேகத்தை எழுப்பியதால் சிறார்களை ரயில்வே காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பிறகு ஹூப்ளியில் இருந்து வந்த மதரஸா அதிகாரிகள், உரிய விளக்கம் அளித்ததை அடுத்து, சிறார்களை பத்திரமாக அனுப்பி வைக்கும் பணியை ரயில்வே போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.