அமெரிக்காவில் ஜுலை 4 ஆம் நாள் குப்பை சேகரிக்க வந்த ராட்சத டிரக் மோதி விபத்துக்குள்ளான இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர் சந்தன் கவை(38) மற்றும் அவரது பெற்றோர் கமல்நயன் கவை(74), அர்ச்சனா கவை(60) மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சந்தனின் மனைவி மனிஷா பலத்த காயங்களுடன் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.கோரமான இந்த விபத்தில் உயிர் தப்பிய இவர்களது பதினோறுமாதக்குழந்தை பலத்த காயங்களுடன் அமெரிக்க மருத்துவமனையில் நீடித்த எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.
துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு உதவும் நோக்கில் நமது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜ் தமது டிவிட்டர் பக்கத்தில் 'தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ள விபத்தில் இறந்த பொறியாளரின் உடல் மருத்துவமனையில் கோமா நிலையில் இருக்கும் மனைவி மனிஷாவுக்கு நினைவு திரும்பும் வரையில் தொடர்ந்து அவ்வண்ணமே பராமரிக்கப்படும் எனவும் மனிஷா கோமாவில் இருந்து மீண்டபின் அவரது ஒப்புதலுக்குப் பிறகு தான் கணவரின் உடலை தகனம் செய்ய முடியும்' எனவும் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் டச்சு குடியுரிமை பெற்ற சந்தனின் சகோதரர் ஆனந்த் கவை இறந்த தனது குடும்பத்தினரின் உடலை தகனம் செய்ய இந்தியாவுக்கு கொண்டு வர அனுமதிக்குமாறு இந்திய அரசியல் ஸ்தாபனத்தை நோக்கி உரக்க குரல் எழுப்பி வருகிறார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை அமைச்சர் சுஷ்மா 'நியூயார்க் துணை தூதரகம் விபத்தில் இறந்த பொறியாளரின் பெற்றோர்களின் தகனம் நியூயார்க்கில் நடத்தப்படலாம் எனவும் ஆனால் பொறியாளர் சந்தன் கவையின் உடல் அவரது மனைவி மனிஷாவின் ஒப்புதலின் பிறகே தகனம் செய்யப்பட முடியும் அதுவரை அவரது உடல் அடக்கம் செய்யப் பட்ட நிலையில் நீடிக்கும் எனவும் முன்மொழிந்துள்ளது’என்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிட்ட பதிலில் தெரிவித்துள்ளார். கூடுதலாக இந்த ஏற்பாட்டுக்கு விபத்தில் இறந்த பொறியாளர் மற்றும் அவரது மனைவி மனிஷா இருவரது குடும்ப உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க சட்ட விதிகளின் படி இறந்த கணவரின் உடலை மனைவியின் ஒப்புதலுக்கு பின்னரே தகனம் செய்ய முடியும் என்பதால் இறந்த பின்னும் கோமாவில் இருக்கும் மனைவி மனிஷாவின் ஒப்புதலுக்காக அடக்கம் செய்யப்பட்ட நிலையில் காத்திருக்கிறது கணவரின் சடலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் டி20 தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரராக ஸ்டீவ் ஸ்மித் சாதனை!

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 89.93% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


