ராஜஸ்தானில் திருமண கோஷ்டியினர் வந்த வேன் விபத்து: 13 பேர் பலி, 30 பேர் காயம்
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.


பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
பில்வாரா, விஜயநகர் சந்திப்பில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வேனில் திரும்பிகொண்டிருந்த போது திடீரென எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...