புது தில்லி: இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு ஸ்மிருதி இராணி வகித்து வந்த மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டது. ஸ்மிருதி இராணிக்கு ஜவுளித் துறை ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கே அதிக முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து மாநிலங்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
கல்வித் துறையில் முக்கியக் கொள்கைகள் பற்றி தற்போது எதுவும் கூறுவதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

