பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கைத்துப்பாக்கியுடன் கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தான் படகு: கட்ச் அருகே மீட்பு

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்துக்கு அருகே நராமி நலா என்ற பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தான் படகை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Updated On :24 பிப்ரவரி 2016, 5:14 am

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கு அருகே குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்துக்கு அருகே நராமி நலா என்ற பகுதியில் கைத்துப்பாக்கியுடன் கேட்பாரற்றுக் கிடந்த பாகிஸ்தான் படகை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

அந்த படகு பாகிஸ்தான் மீனவர்களின் படகு என்பது தெரிய வந்துள்ளது. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம், படகில் இருந்து துப்பாக்கிக் கிடைத்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.

கட்ச் மாவட்டத்துக்கு அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு 2 செல்போன், மீன்பிடி சாதனங்களுடன் பாகிஸ்தானின் மீனவப் படகு ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

அடிக்கடி மீனவப் படகுகள் இந்திய கடலோரங்களில் கரை ஒதுங்குவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 4 மாதங்களில் கைப்பற்றப்பட்டுள்ள 5வது படகு இதுவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.