இடஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் ஒரு ரயில் எஞ்சின் தீவைத்து கொளுத்தப்பட்டது.
ஹரியானா மாநிலத்தில் தொடங்கிய ஜாட் இனத்தவர் போராட்டம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்துக்கும் விரிவடைந்துள்ளது.
இங்குள்ள பரத்புர் மாவட்டத்தில் உள்ள ஹேலாக் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலின் எஞ்சினை போராட்டகாரர்கள் தீவைத்து கொளுத்தினர். மேலும் பாப்ரேரா ரயில் நிலையத்துக்குள் நுழைந்த கலவரகாரர்கள், ரயில் நிலையத்தை அடித்து துவம்சம் செய்தனர். மேலும், டிக்கெட் கவுன்டரிலிருந்த ரூ. 5000 எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர் என பரத்புர் காவல் துறை ஐ.ஜி. அலோக் வஷிஷ்டா கூறினார்.
கலவரகாரர்களை அடக்குவதற்காக இரு இடங்களில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தேசிய நெடுஞ்சாலை 11ல் அமைநதுள்ள உச்சைன் பகுதியில் அதிக அளவில் திரண்டிருந்தவர்களை கலைப்பதற்காக போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக்குண்டும் வீசப்பட்டது.
ஹரியாணாவில் நடைபெறும் போராட்டத்துக்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜாட் இனத்தவர் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் நடத்தினர்.மேலும் ரயில் போக்குவரத்தையும் தடுத்தனர். இதையடுத்து பரத்புர் மாவட்டத்தில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாநில சமூக நலத் துறை அமைச்சர் அருண் சத்ருவேதி, சுற்றுலாத் துறை அமைச்சர் கிருஷ்ணேந்திர கௌர் ஆகியோர் ஜாட் இனத் தலைவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

