பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜாட் போராட்டத்துக்குப் பின்னால் காங்கிரஸ் சதி உள்ளது: பாஜக

இடஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்குப் பின்னாள் காங்கிரஸ் கட்சியின் சதி உள்ளது என பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.

Updated On :23 பிப்ரவரி 2016, 1:17 pm

இடஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்குப் பின்னாள் காங்கிரஸ் கட்சியின் சதி உள்ளது என பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளது.

ஹரியணா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா வுக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர் வீரேந்தர் என்பவர் ஜாட் இனத்தவர் நடத்தி வரும் போரட்டத்தை தூண்டிவிட்டதாக ஒரு 'ஆடியோ டேப்' நேற்று வெளியானது.

இதைச் சுட்டிகாட்டியுள்ள பாரதீய ஜனதா கட்சி, ஜாட் இனத்தவரின் போராட்டத்துக்குப் பின்னாள் காங்கிரஸ் கட்சியின் சதி உள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.

''ராகுல் காந்தி தனது பிரித்தாளும் அரசியலை கைவிட வேண்டும். ஆட்சி அதிகாரத்தை பெற காங்கிரஸ் விரும்பினால் மக்களிடம் சென்று தாங்கள் செய்துள்ள நல்ல காரியங்களை குறித்து விளக்க வேண்டும். காங்கிரஸ் எங்களுக்கு எதிராக சதி செய்தால் நாங்கள் மக்கள் மன்றத்துக்கு சென்று நீதி கேட்போம்''என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா கூறினார்.

இதனிடையே வீரேந்தர் பேசியது குறித்து அம்மாநில காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டுள்ளது. அந்த ஒலி நாடாவில் இருப்பது தனது குரல்தான் என்று கூறியுள்ள அவர், ஆனால், பேச்சுகள் மாற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.