மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வரதட்சிணை விவகாரம்: திங்களன்று நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினார் மணமகள்

ராஜஸ்தானில், அரசுப் பள்ளியில் பணியாற்றும் 24 வயதான ஆசிரியை, மணமகன் வீட்டார் வரதட்சிணைக் கேட்டு பிரச்னை செய்ததால், அடுத்த வாரம் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

Updated On :20 பிப்ரவரி 2016, 9:08 am

ராஜஸ்தானில், அரசுப் பள்ளியில் பணியாற்றும் 24 வயதான ஆசிரியை, மணமகன் வீட்டார் வரதட்சிணைக் கேட்டு பிரச்னை செய்ததால், அடுத்த வாரம் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பைதாபுரா கிராமத்தைச் சேர்ந்த பாரதி யாதவ் என்கிற பிங்கி என்ற ஆசிரியைக்கு வரும் 22ம்ட தேதி திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், மணமகன் வீட்டார் வரதட்சிணையாக கார் வாங்கிக் கொடுக்குமாறு பெண் வீட்டாரை வற்புறுத்தியுள்ளனர். தற்போது முடியாது என்று பெண் வீட்டார் கூறியதற்கு, கார் கொடுக்கவில்லை என்றால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

மேலும், திருமணம் முடிந்து 6 மாதத்தில் மாப்பிள்ளைக்கு கார் வாங்கிக் கொடுப்பதாக பத்திரத்தில் கையெழுத்திடுமாறு மணமகளின் தந்தையை மாப்பிள்ளை வீட்டார் வற்புறுத்தினர்.

 இதனால் அதிருப்தி அடைந்த மணப்பெண் பாரதி, மாப்பிள்ளை வீட்டார் மீது காவல்நிலையத்தில் வரதட்சிணைப் புகார் அளித்தார். இது குறித்து மாப்பிள்ளை வீட்டாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களது பதிலுக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.