மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அருணாசல பிரதேசம்: புதிய அரசு அமைவதற்கான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்

அரசியல் நெருக்கடி நிலவி வரும் அருணாசல பிரதேசத்தில் புதிய அரசு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அங்கு புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

News image
Updated On :18 பிப்ரவரி 2016, 12:05 pm

அரசியல் நெருக்கடி நிலவி வரும் அருணாசல பிரதேசத்தில் புதிய அரசு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த தடையை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அங்கு புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

அருணாசல பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் 14 சிலர் அக்கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். அவர்கள் அனைவரையும் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் குவஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பேரவைத் தலைவர் உத்தரவுக்கு தடை விதித்தது.

இதனிடையில், அரசியல் நெருக்கடி நிலவியதால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஆளுநர் பரிந்துரைத்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அருணாசல பிரதேசத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும், புதிய அரசு அமைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும், குவஹாட்டி நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்து இன்று ஆய்வு செய்வதாகவும் கூறியது.

இன்று குவஹாட்டி நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்த ஆவனங்களை ஆய்வு செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, குவஹாட்டி நீதிமன்றம் உத்தரவிட்டது சரி என தீர்மானித்தனர். எனினும், இதுகுறித்த வழக்கை குவஹாட்டி உயர் நீதிமன்ற அமர்வு இரண்டு வாரங்களுக்குள் முடிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், அருணாசல பிரதேசத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நேற்று பிறப்பித்த உத்தரவையும் விலக்கிக் கொண்டனர்.

இதனால், அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் பாரதீய ஜனதா அரசு அமைக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.