தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

14 மாணவர்கள் கடலில் மூழ்கி பலி: தேடுதல் பணியில் கடலோரக் காவல்படை, விமானப் படை

மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள முருத்-ஜஞ்சீரா கடற்கரைக்கு சுற்றுலா வந்த புணே கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், மாயமான மேலும் சிலரைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையும், விமானப் படையும் ஈடுபட்டு வருகிறது.

Updated On :2 பிப்ரவரி 2016, 5:33 am

மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள முருத்-ஜஞ்சீரா கடற்கரைக்கு சுற்றுலா வந்த புணே கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், மாயமான மேலும் சிலரைத் தேடும் பணியில் கடலோரக் காவல் படையும், விமானப் படையும் ஈடுபட்டு வருகிறது.

காணாமல் போன மாணவர்களின் உடல்களைத் தேடும் பணியில் விமானப் படை மற்றும் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர்களும், கப்பல்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

10 மாணவிகள், 4 மாணவர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர், மும்பையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

புணே இனாம்தார் கல்லூரி மாணவர்கள் 126 பேர், மூன்று பேருந்துகளில் முருத் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தனர். அவர்களில் சில மாணவர்கள் நீந்துவதற்காக கடலுக்குச் சென்றனர்.

அவர்களில், 15-18 மாணவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக எங்களுக்கு மாலை 4 மணி அளவில் தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து, கடலோரக் காவல்படையின் விமானமும், இரண்டு படகுகளும் மீட்புப் பணிகளுக்காகத் திருப்பிவிடப்பட்டன. இதுவரை 14 மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களைத் தேடி வருகிறோம். மேலும், ஆறு மாணவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எங்களுடன் இணைந்து, கடற்படையினரும் இரண்டு விமானங்களின் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக, இனாம்தார் கல்லூரியின் நிர்வாகி பி.ஏ.இனாம்தார், புணேவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""இந்த விபத்தில் இதுவரை 14 மாணவர்கள் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இறந்தவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்களுடன், ஆசிரியர்கள் உள்பட 10 ஊழியர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். மீட்புப் பணிகளுக்காக, கல்லூரியில் இருந்து அதிகாரிகள் குழு விரைந்துள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.