காத்மாண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தஹல் (பிரசந்தா)இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு அந்நாட்டு குடியரசுத் தலைவர் பித்யா தேவி பன்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நேபாளப் பிரதமராகப் பதவி வகித்து வந்த கே.பி.சர்மா ஓலி கடந்த மாதம் 24-ம் தேதி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில், மொத்தமுள்ள 573 வாக்குகளில் பிரசந்தாவுக்கு ஆதரவாக 363 வாக்குகளும், எதிராக 210 வாக்குகளும் பதிவாகின. இந்த தகவலை சபாநாயகர் ஓம்சாரி கர்த்தி முறைப்படி அறிவித்தார்.
நாடாளுமன்றத்தின் தனிப்பெரும் கட்சியான நேபாளி காங்கிரஸ், மதேசிகள் உள்பட, முக்கிய கட்சிகள் பிரசந்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இவர் நேபாள நாட்டின் 39-வது பிரதமர் ஆவார். இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டியில் 90.97 சதவீதம் வாக்குப் பதிவு

ராசிபுரத்தில் விறுவிறு வாக்குப்பதிவு

102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா

அரக்கோணம், சோளிங்கரில் வாக்களித்த வேட்பாளா்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


