டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 22 பேர் மாயம்

மகாராஷ்ட்ரா மாநிலம், மகாத் பகுதியில் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:06 pm

IANS

மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலம், மகாத் பகுதியில் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் மாயமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக கடும் மழை காரணமாக இன்று அதிகாலை 1 மணி அளவில் சாவித்ரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் முப்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அதில் பயணம் செய்த 22 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.

மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.